தொழிலாளர்களுக்கு பாதகமான எதுவும் ஒப்பந்தத்தில் இல்லை

தொழிலாளர்களுக்கு பாதகமான எதுவும் ஒப்பந்தத்தில் இல்லை

“பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு பாதகம் விளைவிக்ககூடிய எவ்வித விடயமும் புரிந்துணர்வு உடன்படிக்கையில் இல்லை.” என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.

“பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், அதனை சட்டவிரோதம் எனக் கூறி சிலர் விமர்சிக்கின்றனர். இப்படியான விமர்சனம் மக்கள் விரோத நடவடிக்கையாகும்.

அதிகரிக்கப்பட்டுள்ள சம்பளம் தோட்டத் தொழிலாளர்களுக்கு தொடர்ச்சியாக வழங்கப்படும்.
சம்பள உயர்வை எவ்வாறு தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பது பற்றியே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மக்களுக்கு முரணான எதுவும் இல்லை.” – என்றார்.