சாந்தனை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு ஜனாதிபதி இணக்கம்

ரஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட சாந்தனை இலங்கைக்கு அழைத்து வர ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்மதம் தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விடயம் தொடர்பாக இன்று (05) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்த விடயம் குறித்து பேசியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன