இந்தவாரம் கூடும் த.மு.கூ - அடுத்தவாரம் கூடும் இ.தொ.கா.

ஜனாதிபதித் தேர்தலில் தமது பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வேலைத்திட்டம் மற்றும் தாம் ஆதரவு வழங்கும் ஜனாதிபதி வேட்பாளர்களுடன் ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய உடன்படிக்கைகள் தொடர்பில் ஆராய மலையகத்தின் இரண்டு பிரதான கட்சிகளும் கூட உள்ளன.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகள் எதிர்வரும் 2ஆம் திகதி கொழும்பில் கூட உள்ளது.

இதன்போது எதிர்வரும் 8ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் உருவாக்கப்பட உள்ள கூட்டணியின் உடன்படிக்கையில் உள்வாங்கப்பட வேண்டிய விடயங்கள் மற்றும் பொதுத் தேர்தலில் முன்மொழியப்பட வேண்டிய விடயங்கள் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து கலந்துரையாட உள்ளன.

இதேவேளை, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அடுத்தவாரம் கூட உள்ளதாக தெரியவருகிறது. இதன்போது அக்கட்சி ஆதரிக்கும் வேட்பாளரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் ஏற்படுத்திக்கொள்ளும் உடன்படிக்கை தொடர்பில் ஆராய உள்ளதாக தெரியவருகிறது.

அத்துடன், கடந்த சில நாட்களாக இ.தொ.காவின் மாவட்டத் தலைவர்கள் மற்றும் முக்கிய உறுப்பினர்களுடன் அக்கட்சியின் தலைவர் செந்தில் தொண்டமான் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான ஆலோசனைகளை நடத்தி வருகிறார்.