புஸ்ஸல்லாவையில் குளவி கொட்டுக்கு இலக்காகி 14 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

புஸ்ஸல்லாவையில் குளவி கொட்டுக்கு இலக்காகி 14 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

கண்டி, புஸ்ஸல்லாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடகம அடபாகே வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக சென்றிருந்த நோயாளர்கள் உட்பட 14 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புஸ்ஸல்லாவை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (31) காலை இடம்பெற்றுள்ளது.

வைத்தியசாலைக்கு அருகில் உள்ள மரமொன்றில் இருந்த குளவி கூடு ஒன்று கலைந்ததால் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

10 நோயாளர்களும் 04 வைத்தியசாலை பணியாளர்களுமே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குளவி கொட்டுக்கு இலக்காகியவர்கள் கம்பளை மற்றும் அடபாகே ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 11 பேர் சிகிச்சை பெற்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.