இ.தொ.காவில் உருலபோகும் மேலும் இரண்டு தலைகள்

இ.தொ.காவில் உருலபோகும் மேலும் இரண்டு தலைகள்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸில் இருந்து மேலும் இரண்டு முக்கிய நபர்கள் விலக உள்ளதாக அறிய முடிகிறது.

நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதில் கட்சிகள் பல்வேறு இழுபறிகள் எழுந்துள்ளன.

தமக்கு போட்டியிட சந்தர்ப்பம் வழங்காவிடின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் கட்சியை விட்டு விலகுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.

அதேபோன்று உபத் தலைவர் பதவியை வகிகும் மற்றுமொறு நபரும் கட்சியை விட்டு விலகும் நகர்வுகளில் ஈடுபட்டுள்ளார்.

இ.தொ.காவின் உபத் தலைவராக பதவி வகித்த பாரத் அருள்சாமி நேற்று கட்சியைவிட்டு விலகியிருந்தார்.

உப தலைவரும், ஊவா மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான ஆறுமுகம் சிவலிங்கமும் கட்சியைவிட்டு விலகியுள்ளார். 

இ.தொ.காவின் உயர்மட்டத்தில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகளே அவ்வாறு அடுத்தடுத்து பல முக்கிய நபர்கள் கட்சியைவிட்டு செல்வதாகவும் அறிய முடிகிறது.