பாரத்தின் இடத்துக்கு பாலக்கிருஷ்ணன் - புதிய நியமனத்தை வழங்கிய இ.தொ.கா.
"கண்டி மாவட்டத்திற்கான இ.தொ.காவின் அரசியல் மற்றும் தொழிற்சங்க அமைப்பாளராக இளம் சமூக சேவையாளர் பாலகிருஷ்ணன் பிரசாத்குமார் நியமணம் "
கண்டி மாவட்டத்திற்கான இ.தொ.காவின் அரசியல் மற்றும் தொழிற்சங்க அமைப்பாளராக பாலகிருஷ்ணன் பிரசாத்குமார் இன்றைய தினம்(08) நியமிக்கப்பட்டுள்ளார்.
இ.தொ.கா தலைமையகமான சௌமியபவனில் இன்றைய தினம்(08) கூடிய கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், கலந்துரையாடல்களின் பின்னர் இந்நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்தில் நிலவிய அமைப்பாளர் பதவி வெற்றிடத்தை கடந்த 24 மணித்தியாளத்திற்குள் இ.தொ.காவின் தலைமைகள் பூர்த்தி செய்துள்ளனர்.
பாலகிருஷ்ணன் பிரசாத்குமார் என்பவர் ஒரு இளந் தலைமுறையினை சார்ந்தவர் மாத்திரமன்றி, கடந்த காலங்களில் கண்டி மாவட்டத்திற்காக இ.தொ.கா இளைஞர் அணியின் சிரேஷ்ட அமைப்பாளராகவும் தனது கடைமையினை சிறப்பாக செய்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நியமனமானது இ.தொ.கா பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தலைவர் செந்தில் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
இ.தொ.காவின் கண்டி மாவட்ட அமைப்பாளராக செயல்பட்டுவந்த பாரத் அருள்சாமி நேற்று தமது அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்திருந்த பின்புலத்திலேயே பாலகிருஷ்ணன் பிரசாத்குமார், மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Editor