சட்ட சிக்கல்களை தீர்த்து 1700 ரூபாவை உறுதியாக பெற்றுக்கொடுப்போம் - ஜீவன் தொண்டமான்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிக்கும் வகையில் தொழில் அமைச்சரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.

பெருந்தோட்ட நிறுவனங்களினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று இடம்பெற்ற போதே உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

வழக்கு விசாரணையில் இன்று(04) கலந்துகொண்ட நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்டகட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் இது தொடர்பாக ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நீதிமன்றத்தை பொறுத்தவரையில் சட்ட சிக்கல் காணப்படுவதனால் இடைக்கால தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நீதிமன்றம் கூறியிருக்கின்றது ஒரு மாத காலப்பகுதிக்குள் இந்த பிரச்சினைகளை முடிவிற்கு கொண்டுவருவதாக.

மேலும் தொழிற்சங்க தலைமைகளும், அரசியல் தலைமைகளும் வெடி வெடித்து சந்தோசப்படாமல் முதலை கண்ணீர் வடிக்காமல் ஒற்றுமையாக இருந்தால் போதும். 

நாங்கள் சொல்வதையே செய்வோம், கடந்த 2020ஆம் ஆண்டு கூறியது போல் 1000ரூபாவினை பெற்றுக்கொடுத்தோம், தற்பொழுது ரூபா1700 யை பெற்றுத்தருவதாக கூறியிருந்தோம் அதனையும் பெற்றுக்கொடுப்போம். 

எங்களை பொறுத்த வரையில் முதல் சுற்றில் நாங்கள் வெற்றிப்பெற்றோம், இரண்டாவது சுற்றில் அவர்கள் வெற்றிப்பெற்றார்கள். ஆகவேதான் மூன்றாவது சுற்றில் நாங்கள் வெற்றிப் பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்தார்.