தேர்தலில் யாருக்கு ஆதரவ - 18ஆம் திகதி கூடும் இ.தொ.கா. 

எதிர்வரும் 18ஆம் திகதி இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை கூடவுள்ளதாக அமைச்சரும் இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.

தேர்தலில் யாருக்கு ஆதரவ - 18ஆம் திகதி கூடும் இ.தொ.கா. 

எதிர்வரும் 18ஆம் திகதி இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை கூடவுள்ளதாக அமைச்சரும் இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்டி மாவட்ட தோட்டத் தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் இளைஞர்களுடனான சந்திப்பில் கலந்துக்கொண்டு உறையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். 

எதிர்வரும் 18ஆம் திகதி கொட்டகலை CLF வாளாகத்தில் கூடவுள்ள தேசிய சபையினூடாக 2024ஆம் ஆண்டின் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது தொடர்பாக இறுதி தீர்மானம் எடுப்பதற்காக இந்த தேசிய சபை கூடவுள்ளதாக  இ.தொ.கா பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் மேலும் தெரிவித்தார். 

அமைச்சர் ஜீவன் தொண்டமான் மேலும் கருத்து தெரிவிக்கையில்

"நான் அமைச்சரவை அமைச்சராகப் பதவியேற்று இரண்டு வருடம் ஆகிறது. இதன் போது என்னால் முடிந்ததைச் செய்துள்ளேன். கடந்த வருடத்தில் கண்டியில் மாவட்டத்தில் மாத்திரம் தோட்ட உட்கட்டமைப்புக்காக ரூ.160 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இது முன்னெப்போதும் இல்லாத கணிசமான தொகையாகும்.

இந்திய அரசின் ஆதரவுடன் கண்டி மற்றும் பதுளையில் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையங்களை நிறுவுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.  மலைநாட்டில் சுமார் ஒரு மில்லியன் மக்கள் தொகை கொண்டிருந்தாலும், பெருந்தோட்டத் துறையில் மட்டும் 115,000 பேர் பணியாற்றுகின்றனர்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வைக் கோரி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு நடைமுறைகளை முன்னெடுத்துள்ளார். மலையகத்தின் அபிவிருத்தி மற்றும் சம்பள பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. 

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கும், பல தோட்டக் கம்பனிகள் சம்பள உயர்வுக்கு ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளனர். பெருந்தோட்டக் கம்பனிகளுடன் எதிர்வரும் 12ஆம் திகதி திங்கட்கிழமை தொழில் அமைச்சில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது இதன் போது தீர்க்கமான சாதக தன்மை வாய்ந்த பதில் கிடைக்கப்பெறும் என நம்பிக்கை தெரிவிப்பதாகவும் அமைச்சர் கூறினார்.