காங்கிரஸி கருப்பு ஆடுகள் - களையெடுக்கப்போகும் - ஜீவன் தொண்டமான்
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் பெற்றுக் கொடுக்காமல் 1,350 ரூபாய் பெற்றுக்கொடுத்துள்ளீர்கள் என பலர் விமர்சனம் செய்கின்றனர்.
1,700 ரூபாய் பெற்று தருகிறேன் என்று சொல்லியிருந்தேன். இருந்தபோதிலும் 1,350 பெற்று கொடுத்துள்ளோம். இதுவே எங்களுக்கு பெரிய வெற்றி ஆகும் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில் நேற்று மாலை (13 ) அக்கரப்பத்தனை மன்ராசி விளையாட்டு மைதானத்தில். தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வரலாற்றில் முதல் தடவையாக அக்கரபத்தனை பகுதிக்கு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம். அதேபோல் இதுவரையும் மலையகத்தை நாங்கள் எந்த இடத்திலும் தலைகுனிய வைத்ததில்லை அதுதான் எமது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்.
ஒரு சிலர் விமர்சனம் செய்கிறார்கள் அவர்களே 2018 ஆம் ஆண்டு 50 ரூபாய் வாங்கி தருகிறேன் என்று கூறினர். இதுவரைக்கும் பெற்றுக் கொடுத்தார்களா இல்லை.
சஜித் பிரேமதாஸ அவர்களும் சிறு தோட்ட உரிமையாளர் ஆக்குகிறேன் என்று சொல்கின்றார். நடைமுறைப்படுத்துவதை சொல்ல வேண்டும். அதை விடுத்து பொய்களை கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றார். ரூ.50 பெற்றுக் கொடுக்க முடியாதவர்கள் இன்று எம்மை விமர்சனம் செய்கின்றார்கள்.
இம்முறை நுவரெலியா மாவட்டத்தில் 2 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று நாங்கள் வெற்றி பெறுவோம். அந்த வெற்றியில் மலையக மக்களாகிய நீங்களும் பங்கு கொள்ள வேண்டும் என்பதே எனது ஆசை. அதேபோல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியில் நிறைய கருப்பு ஆடுகள் இருக்கின்றது.
அவற்றையும் 22 ஆம் திகதிக்கு பிறகு காலினை உடைத்து விரட்டி அடிப்போம். ஏனென்றால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என சொல்லிக்கொண்டு இந்தப் பக்கம் ஒரு கால் அந்த பக்கம் ஒரு கால் என வைத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.
நான்கு வருட காலமாக நான் பாராளுமன்றத்தில் இருக்கின்றேன். இதில் 88 தடவைகள் மலையை மக்கள் சார்ந்த பேசியிருக்கின்றேன்.
அதை விடுத்து நான் பாராளுமன்றத்திற்கு சென்று மலையக மக்களை சார்ந்து அல்லாமல் வெறுமனே வெற்று கதைகளை பேசி கொள்வதில்லை.
உங்களுக்கு தெரியும் இரண்டு வருடங்களுக்கு முன்னர் இருந்த விலைக்கும் தற்போது இருந்த விலைக்கு எவ்வளவு வித்தியாசம் என்று. ஆனால் விலைவாசி அதிகரித்திருந்தாலும் 2 வருடத்திற்கு முன் நாட்டில் பொருட்களே இல்லாத ஒரு சூழ்நிலை இருந்தது. ஆனால் தற்பொழுது விலை அதிகரித்தாலும் நாம் வாழ்வதற்கு தேவையான அனைத்தும் இப்பொழுது இருக்கின்றது.
சேவல் கட்டாயம் கூவும். மீண்டும் ரணில் மீண்டும் ரணில் என கூறியதோடு மலையக அபிவிருத்தி சம்பந்தமான கருத்துக்களையும் இதன்போது பேசினார்.
-மலையக நிருபர் கிரிஷாந்தன்-