நுவரெலியாவில் யானை சின்னத்தில் போட்டியிடும் இ.தொ.கா
நுவரெலியா மாவட்டத்தில் யானை சின்னத்தில் போட்டியிடுவதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவுடன் இணக்கப்பாடுகளை எட்டியுள்ளதாக தெரியவருகிறது.
சிலிண்டர், சேவல் மற்றும் யானை சின்னங்களில் போட்டியிடுவது குறித்து இ.தொ.கா கடந்த சில நாட்களாக பேச்சுகளில் ஈடுபட்டுவந்தது.
சேவல் சின்னத்தில் போட்டியிட்டால் தேசியப் பட்டியல் ஒன்றை பெற்றுக்கொள்ள முடியும் என இ.தொ.கா கணக்குப்போட்டது. ஆனால், வாக்குகளை அதிகமாக பெற்றுக்கொள்வதில் சிக்கல்கள் ஏற்படும் என்பதால் சிலிண்டர் அல்லது யானை சின்னம் குறித்து பரிசீலிக்கப்பட்டது.
யானை சின்னம் மலையக மக்கள் மத்தியில் பலக்கப்பட்ட சின்னமாக இ.தொ.கா கருதுவதால் அந்த சின்னத்தில் போட்டியிட ரணிலிடம் பேச்சுகளை நடத்தி வருகிறது. அதற்கான பச்சைக்கொடியை ரணில் காட்டியுள்ளதாக தெரியவருகிறது.
என்றாலும், இன்னமும் உத்தியோகப்பூர்வமான முடிவுகள் எதுவும் வெளியாகவில்லை. ரணிலுடனான பேச்சுகளில் தமக்கான தேசிய பட்டியல் குறித்தும் இ.தா.கா கோரிக்கைகளை முன்வைத்து வருவதாகவும் தெரியவருகிறது.
Editor