வெனிசுலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கமொன்று இன்று ஏற்பட்டுள்ளது. வெனிசுலா தலைநகர் Caracas க்கு மேற்கே 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள Zulia மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகியுள்ளதுடன், இந்த நிலநடுக்கம் வெனிசுலாவின் ஏனைய மாகாணங்களிலும் உணரப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.
Editor