ஹட்டன் டிக்கோயா மாநகர சபை விடுத்துள்ள எச்சரிக்கை - வரி செலுத்தாதவர்களுக்கு சட்ட நடவடிக்கை
ஹட்டன் டிக்கோயா மாநகர சபைக்கு சிலர் நீண்டகாலமாக செலுத்த வேண்டிய மதிப்பீட்டுப் பணத்தை செலுத்த தவறி வருவதாகவும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஹட்டன் டிக்கோயா மாநகர சபையின் செயலாளர் பண்டார தெரிவித்தார்.
ஹட்டன் டிக்கோயா நகர சபைக்கு சிலர் நீண்டகாலமாக செலுத்த வேண்டிய மதிப்பீட்டுப் பணத்தை செலுத்த தவறி வருவதாகவும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஹட்டன் டிக்கோயா மாநகர சபையின் செயலாளர் பண்டார தெரிவித்தார்.
அவர் கருத்து வெளியிடுகையில்,
இவ்வருடம் ஜூன் 30ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட உண்டியல் காரணமாக இந்த மாநகரசபைக்கு வரவேண்டிய மதிப்பீட்டு பற்றாக்குறை 100 இலட்சம் எனவும் பண்டார தெரிவித்தார்.
எமது நகர சபைக்கு வரி செலுத்தும் மக்கள் டிசம்பர் மாதம் வரை வரி செலுத்துவர் எனவும் இந்த சூழ்நிலைகளின் அடிப்படையில் இந்த வருடம் டிசம்பர் மாத இறுதிக்குள் மாநகர சபைக்கு 400,000 ரூபா மாத்திரமே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
வரி பாக்கிகள்
அண்மைக்காலமாக நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட்-19 தொற்று மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளை கருத்திற் கொண்டு இந்தப் பிரதேசத்தில் மதிப்பீடுகளை செலுத்தும் சிலர் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும், அந்தச் சூழல்கள் காரணமாக அக்கால கட்டங்களில் ஏற்பட்ட நிலுவைத் தொகைகள் இருப்பதாகவும் பண்டார தெரிவித்தார்.
அந்த சூழ்நிலைகளின் அடிப்படையில் நகர சபைக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை தவணை முறையில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சிலர் நீண்டகாலமாக செலுத்த வேண்டிய மதிப்பீட்டுப் பணத்தை செலுத்த தவறி வருவதாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பண்டார மேலும் தெரிவித்தார்.
(செய்தி - மஸ்கெலியா நிருபர்)
Editor