'மலையகம் 200 - திகாம்பரம் 20 திருப்புமுனை அரசியல்' நூல் வெளியீட்டு விழா அட்டனில்!

'மலையகம் 200 - திகாம்பரம் 20 திருப்புமுனை அரசியல்' நூல் வெளியீட்டு விழா அட்டனில்!

தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித்தலைவரும் தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவருமான திகாம்பரத்தின் 'மலையகம் 200 - திகாம்பரம் 20 திருப்புமுனை அரசியல்' எனும் நூல் எதிர்வரும் 02ஆம் திகதி அட்டன் DKW மண்டபத்தில் வெளியீடு செய்யப்பட உள்ளது.

திகாம்பரம் அரசியலுக்கு வந்து 20 வருட நிறைவினையொட்டி வெளியிடப்படுகிற இந்த நூல், அரசியல் தலைவர்களின் வாழ்த்துரைகள், 14 வருட பாராளுமன்றத்தில் உரையாற்றிய தேர்ந்தெடுக்கப்பட்ட உரைகள், அமைச்சராக இருந்த காலத்தில் சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரங்கள் ஆகியனவற்றின் தொகுப்பாக வெளிவருகிறது.

இந் நிகழ்வில் நூல் அறிமுக உரையை சமூக செயற்பாட்டாளர் சந்திரசேகரனும் கருத்துரைகளை பேராதனை பல்கலைக்கழகத்தில் இளங்கலைமாணி பட்டபடிப்பிற்காக 'மலையக கூட்டணி அரசியல்' பற்றிய ஆய்வினை செய்த நிர்மலா ஆனந்தராஜ், மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.ராதாகிருஸ்ணன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவர் ரவுப் ஹக்கீம் ஆகியோரும் வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.