மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார்? : முடிவெடுக்க நிர்வாகக் குழு கூடுகிறது  

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலுக்காக கட்சி மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.

மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார்? : முடிவெடுக்க நிர்வாகக் குழு கூடுகிறது  

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாகக்குழு, அடுத்த பதினைந்து நாட்களுக்குள் கூடுவதற்கு தீர்மானித்துள்ளது. இதன்போது,

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலுக்காக கட்சி மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.

அத்துடன், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பெசில் ராஜபக்ஷவும் அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களை இந்த நாட்களில் சந்திக்கவுள்ளார். குழுக்களாக சந்திப்பதாக பொதுஜன பெரமுன குறிப்பிட்டுள்ளது.

பொதுஜன பெரமுன கட்சியின் எதிர்வரும் அரசியல் செயற்பாடுகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.