மலையக ரயில் சேவை பாதிப்பு!

மலையக ரயில் சேவை பாதிப்பு!

இன்று வெள்ளிக்கிழமை (17) காலை ஏற்பட்ட மண் சரிவினால் மலையகத்துக்கான ரயில் சேவைகள் பாதிப்படைந்துள்ளன.

தியத்தலாவ புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள தண்டவாளத்திலேயே மண்மேடு சரிந்துள்ளது. இந்நிலையில், குறித்த மார்க்கத்தில்  ரயில் சேவை தடை செய்யப்பட்டது.

இதனை ரயில் என்ஜின் சாரதிகள்  கவனிக்கத் தவறியதால்,  ரயில் ஒன்று  சேறு மற்றும் பாறைகளில் சிக்கிக்கொண்டது.

இந்நிலையில், ரயில் போக்குவரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.