சென்மேரீஸ் தேசிய கல்லூரி மாணவிக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் பாராட்டு!

சென்மேரீஸ் தேசிய கல்லூரி மாணவிக்கு கல்வி  இராஜாங்க அமைச்சர் பாராட்டு!

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்.

நாவலப்பிட்டி தொடக்கம் பொகவந்தலாவ வரையிலான 54கிலோமீற்றர் தூரத்தினை எட்டு மணித்தியாலங்களும் 30நிமிடங்களில் நடந்து சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த பொகவந்தலாவ சென்மேரீஸ் தேசிய கல்லூரியில் தரம்10ல் கல்வி பயிலும் வசந்தகுமார் நிதர்ஷனாவை கல்வி அமைச்சிக்கு அழைத்து கல்வி இராஜாங்க அமைச்சர் அருணசலம் அரவிந்தகுமார் பாராட்டினை தெரிவித்தார் .

குறித்த மாணவிக்கு பாராட்டுக்களை தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர் பரீசில்களையும் வழங்கி வைத்தார் இந் நிகழ்வில் அமைச்சர் உட்பட சோழன் உலக சாதனை புத்தக நிருவனத்தின் இலங்கைக்கான உபதலைவர் ஸ்ரீநாகவானி ராஜா சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் நுவரெலியா மாவட்டத்திற்கான தலைவர் எஸ்.சதீஸ்குமார் மற்றும் அமைச்சின் அதிகாரிகளும் என பலரும்கலந்து கொண்டனர்